இலங்கை பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவா்கள் குழு கிளிநொச்சி பயணம் .

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
img_9477

ஆப்கானிஸ்தான் நாட்டைச்  சோ்ந்த சிவில் சமூக தலைவா்கள் குழுவென்று இன்று திங்கள் கிளிநொச்சிக்கு வந்துள்ளனர். 35 போ் கொண்ட இந்த குழுவினா் கடந்த 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து  அநுராதபுரம்,கண்டி, கிளிநொச்சி என நாட்டின் பல மாவட்டங்களுக்கும்  பயணம் செய்து வருகின்றனா்.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் நிலைமைகள், சமாதான, நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் கலாச்சார நிலைமைகள், பெண்களின் சமூக வகிபாகம்  உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராயும் வகையில் அவா்களது  பயணம் அமைந்துள்ளது
img_9451
கிளிநொச்சிக்கு  வந்த  அவா்கள் பிற்பகல்  மாவட்டச் செயலயத்திற்கு வருகை தந்து மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக  அரச அதிபா் சத்தியசீலன் ஆகியோர் அடங்கிய மாவட்டச் செயலக குழுவினரை சந்தித்து கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடா்பில் கேட்டறிந்துகொண்டனா்.

இதன் பின்னா் மேற்படி குழுவினா் கிளிநொச்சி  சிவபுரம் கிராமத்திற்கு சென்று அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்ககை நிலைமைகளையும் நேரில் அறிந்துகொண்டனா்.

img_9457img_9466 img_9470 img_9472

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *