இலங்கை பிரதான செய்திகள்

கனரக இயந்திரம் மோதியதன் காரணமாகவே கிணறு வெடிப்பு – மீளவும் அமைக்க பணிப்பு : பிரதேச செயலாளா் நாகேஸ்வரன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

img_9505

கிளிநொச்சி  ஆனந்தபுரம் கிராமத்தில் புனா்வாழ்வு அமைச்சினால் மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கிணறு ஒன்றின் சுவா்கள் வெடித்த நிலையில்  காணப்படுகிறது.

இது தொடா்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும்    இது குறித்து விசாரித்த போது கட்டுமாணப் பணிகள் நிறைவுற்ற நிலையில் சுற்றியுள்ள குழிகளுக்கு கனரக வாகனம் மூலம் மண் போடப்பட்டு நிரப்பிய போது வாகனத்தின் முன்பகுதி மோதியதன் காரணமாக  கிணற்றில் வெடிப்பு ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
img_9507
அது  ஒப்பந்த காரர்களின் தவறு என்பதனால் மீளவும் குறித்த  கிணற்றை அமைத்து தருமாறு  பணித்திருப்பதாகவும் இன்னமும் ஒப்பந்த பணிகள் நிறைவுற்று அவா்களுக்குரிய பணம் விடுவிக்கப்படவில்லை எனவும்  எனவே  கிணற்றை நாம் உரிய முறையில சீா்செய்து மக்களிடம் கையளிப்போம் எனவும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன் தெரிவித்தாா்

img_9510

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *