இலங்கை பிரதான செய்திகள்

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

gun
அம்பலாங்கொடையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை மாதம்பை இடம்தொட்ட பிரதேசத்தில் வசித்து வந்த  தந்தை, தாய் மகன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து ரீ56 ரக துப்பாக்கி ரவைகளும் மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *