இலங்கை பிரதான செய்திகள்

அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மஹிந்த விமர்சனம் செய்கின்றார் – ராஜித

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

rajitha-senaratna_ci

அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நல்ல வழியில் அல்லது கெட்ட வழியில் அதிகாரத்தை மீளவும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே மஹிந்தவின் நோக்கமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் கருத்துச் சுதந்திரத்தினை மஹிந்த ராஜபக்ஸ துஸ்பிரயோகம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகள் குறித்த யதார்த்ததை மூடி மறைத்து மக்களை திசை திருப்பும் வகையில் மஹிந்த கருத்து வெளியிட்டு வருவதாகவும் நாட்டின் பிரச்சினைகள் குறித்து தங்களது கருத்தை வெளியிடுவது ஜனநாயக அரசியலின் ஓர் அங்கம் என்ற போதிலும், அரசியல் காழ்;ப்புணர்ச்சியில் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் குறுகிய விமர்சனங்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *