இலங்கை பிரதான செய்திகள்

சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் செல்வம் அடைக்கலநாதனின் தந்தைக்கு அஞ்சலி

dsc_0194
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன் தனது 83 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(4) மாலை காலமானார்.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள அன்னாரில் இல்லத்தில் அவருடைய பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (7) புதன் கிழமை காலை விசேட வானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்த  சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
dsc_0192
இவர்களுடன் நிதி அமைச்சர் ரவி கருநானாயக்க, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஊடக அமைச்சர் கயந்த கருனாதிலக்க, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், யோகேஸ்வரன், வியாழேந்திரன் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
dsc_0173dsc_0194 dsc_0198 dsc_0210 dsc_0214dsc_0259 dsc_0270 dsc_0278

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *