இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் ஆளுநா் தலைமையில் காணிப்பிணக்குகள் ஆராய்வு :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
img_9564

வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  மக்களின் காணிப் பிணக்குகள்  ஆராயும் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று 09-12-2016  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான இந்த  நிகழ்வில் கரைச்சி, கண்டாவளை, பளை,பூநகரி  பிரதேச செயலக பிாிவுகளில் இருந்து  அழைக்கப்பட்டிருந்த மக்கள் தங்களின் காணிப் பிணக்குகளை ஆளுநரிடம் முறையிட்டுள்ளனா்.

நீண்ட காலமாக  தீர்க்கப்படாது இருந்து வந்த காணிப் பிணக்குகள் தொடா்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மக்கள் தங்களின் காணிப் பிணக்குகள் தொடா்பில் ஆளுநரிடம் முறைபாடுகளை பதிவு செய்தனா். தற்போது சில   காணிப் பிணக்குகளுக்கு தீா்வு  காணப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலவற்றுக்கு ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடா்ந்து வரும் ஜனவரி மாதம் மீண்டும் கிளிநொச்சிக்கு வருகை தந்து குறித்த காணிப் பிணக்குகள்  தொடா்பில்  ஆராய்வேன் என ஆளுநா் குறிப்பிட்டாா்.
img_9566
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநருடன்  வட மாகாண காணி ஆணையாளா் மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட மேலதி அரச அதிபா் சத்தியசீலன் மற்றும்  மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளா்கள், காணி உத்தியோகத்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *