இலங்கை பிரதான செய்திகள்

துறைமுகம் தனியார் மயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – நாமல் ராஜபக்ஸ

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
namal
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியார் மயப்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனியார் மயப்படுத்தலினால் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்றே ஏனைய அரச நிறுவனங்களும் தனியார் மயப்படுத்துவதனை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர் துறைமுகத்தை தனியார் மயப்படுத்தும் போது கிடைக்கும் பணம் எங்கு செல்கின்றது என்பதும் கேள்விக்குறியே என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *