இலங்கை பிரதான செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
arjuna
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரை செய்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி  மோசடி தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடருமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் அலவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பசுவல் ட்ரஸீரஸ் நிறுவனம் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட முடியும் என  சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள்  சுட்டிக்காட்டியுள்ளன.

கோப் அறிக்கை மற்றும் கணக்காய்வாளர் அறிக்கை என்பனவற்றின் அடிப்படையில் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர், சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரியதற்கு அமைய அறிக்கை தயாரிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *