Home சினிமா இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.

by admin

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தனது 61 வயதில் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை  இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட தனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவா் உயிாிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஜனநாதனினின் உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். #இயக்குனர் #ஜனநாதன் #காலமானார் #விஜய்_சேதுபதி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More