Home இலங்கை உயிருடன் இருக்கும் வரையில் அரசியலில் ஈடுபடுவேன் – ஜனாதிபதி

உயிருடன் இருக்கும் வரையில் அரசியலில் ஈடுபடுவேன் – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், தாம் உயிருடன் இருக்கும் வரையில் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் எனினும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஓர் அரசியல் விலங்கு எனவும், தமது மரபணுக்களில் அரசியல் கலந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் பதவிகள் இன்றி தாம் அரசியலில் ஈடுபடத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகப் பிரதானிகளுடன் இன்றைய தினம் காலை நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More