Home இலங்கை உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீதான அரசின் வன்முறைக்கு கண்டனம்

உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீதான அரசின் வன்முறைக்கு கண்டனம்

by admin


சுதந்திர இலங்கையின் அரசாங்கங்களுள் மிகமோசமான அரசாங்கமான இராஜபக்ச குடும்பத்தினரின் அரசாங்கம் காலிமுகத்திடலிலும்,அலரிமாளிகைக்கு முன்பாகவும் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராகத் தனது குண்டர்களை ஏவி வன்முறைத் தாக்குதல் ஒன்றை கடந்த 09.05.2022 அன்று நடாத்தியுள்ளது. இந்த அரக்கத்தனமான,மற்றும் ஜனநாயக விரோதமான நடவடிக்கையைத் தமிழ் சிவில் சமூகஅமைப்புகளாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


தொடர்ந்து வந்தஅரசாங்கங்களின் தவறானஅரசியல்,பொருளாதாரகொள்கைகளால் சீரழிந்து வந்த நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்துள்ளது. இதுமிகத் தீவிரமான பொருளாதாரநெருக்கடிகளை மக்களுக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது.

விளைவாக தெற்கில் பொதுமக்கள் பதவியில் உள்ளஅரசுக்கு எதிராக குறிப்பாக இராஜபக்சக்களுக்கு எதிராக கடந்த இரண்டரைமாதங்களுக்குமேலாகத்தொடர்ச்சியானஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.


ஆரம்பத்தில் தற்போதைய ஜனாதிபதியைப் பதவிவிலகும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட போராட்டங்கள் படிப்படியாக மகிந்த பதவிவிலகவும்,பின்னர் அனைத்து இராஜபக்ச குடும்பத்தினரும் பதவிவிலகவும், இன்றுஅனைத்துப் பாராளுமன்றஉறுப்பினர்களும் பதவிவிலகவும் கோரும் போராட்டமாக பரிணாமவளர்ச்சியடைந்துள்ளது.

தெற்கின் இந்த மாற்றங்களைத் தமிழ் மக்களும் மிகவும் கரிசனையோடும்,கவனத்துடனும் அவதானித்து வருகின்றனர். கடந்தகாலதங்களது கசப்பானஅனுபவங்களின் காரணமாக இன்னமும் பெரும்பாலான தமிழர் இப்போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் அவதானிப்பவர்களாக இருந்துவருகின்ற அதேவேளை குறிப்பிடத்தக்கஅளவு தமிழர்கள் இந்த போராட்டங்களில் தங்களின் பங்களிப்பினை தனிநபர்களாகவும்,குழுக்களாகவும் வழங்கிவருகிறார்கள்.


ஆரம்பம்முதல் தொடர்ந்து பதவிக்குவந்த அனைத்து சிங்களபௌத்த பேரினவாதஅரசாங்கங்களும் தமிழ் மக்களின் தேசிய இருப்பைஅழிக்கும் நோக்கில் மேற்கொண்டு வருகின்ற இனவழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஆரம்பத்திலிருந்து(இருபதுவருடங்களுக்குமேலாக)அமைதிவழியில் தமிழ் மக்கள் போராடியபோது அந்த அரசாங்கங்கள் அவற்றை மிகையான வன்முறை மூலம் எதிர்கொண்டன.

அமைதிவழியிலான எமதுகோரிக்கைகள் தொடர்ந்துபுறக்கணிக்கப்பட்டன. தொடர்ந்தும் தமிழினவழிப்பு செயற்பாடுகளை அரசாங்கங்கள் தொடர்ந்தன. இந்நிலை தமிழ் இளைஞர்களை வேறுவழியேதுமின்றி 1970களில் ஆயுதமேந்த உந்தித்தள்ளியது. அப்போதும் தமிழர்களின் வாழ்வுரிமைகளை வழங்க மறுத்த சிங்களபௌத்த பேரினவாதஅரசாங்கங்கள் தமிழர்கள் மீது மேன்மேலும் அதிகரித்தஅளவில் வன்முறைகளைத் திணித்தன.

ஈற்றில் இதே இராஜபக்சகுடும்பத்தின் முன்னைய ஆட்சி, தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியான பாரியபடுகொலைகளை நடாத்தி,ஈற்றில் முள்ளிவாய்க்காலில் 2009 மார்ச்,ஏப்ரல்,மே மாதங்களில் இந்தநூற்றாண்டில்உலகின் முதலாவது பாரிய இனப்படுகொலை மூலமாகதமிழர்களின் ஆயுதவழிஎதிர்ப்பையும் மௌனிக்கச் செய்தது.


வன்முறைக்குப்பழக்கப்பட்டு போன சிங்களபௌத்த பேரினவாத அரசாங்கங்கள் பொதுமக்களின் அமைதிவழிப் போராட்டங்களுக்குஎப்போதும் தனதுசொந்த இனமாக இருந்தாலும் தமக்குப்பழகிய வழிகளிலேயே பதிலளிக்கும் என்பதுமீண்டும் ஒருதடவை நேற்றுமுன்தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசுவழமைபோலவே, உரிமைகளைக் கோரிய போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக வன்முறையை கடந்த9ம் திகதி நிகழ்த்தியபோது தெற்கின் பொதுமக்கள் அரச வன்முறைக்கு பொதுமக்களின் வன்முறையே பதில் என வீதியிலிறங்கித் திருப்பிஅடித்துள்ளதற்குப் பின்னாலுள்ளமன உணர்வை எங்களால் இலகுவில் புரிந்துகொள்ளமுடிகின்றது.

அந்த வன்முறைகளின் அங்கமாக தமது எதிரிகள் என நம்புவோரின் மீது தாக்குதல் நடாத்துவது,அவர்களின் சொத்துக்களை அழிப்பது,பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என வீதியிலிறங்கியுள்ள பொதுமக்களின் எதிர்வினைகள் தொடர்கின்றன.

இத்தகைய செயற்பாடுகளை போராடுபவர்களும் பொதுமக்களும் அவதானமாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என நாம் அன்புடன் வேண்டுகின்றோம்.


ஏனெனில் சிங்களபௌத்தபேரினவாத அரசாங்கமும், அதனைத் தாங்கிப்பிடிக்கும் சித்தாந்தங்களும் அரசும் வன்முறையின் எந்தஎல்லைக்கும் செல்லக் கூடியது என்பதற்கானஅனுபவ சாட்சிகளாகத மிழ் மக்களாகியநாம் உள்ளோம்.

ஆகவே தெற்கின் போராட்டக்காரர்களும் பொதுமக்களும் மிக அவதானமாகவும், நிதானமாகவும்,தந்திரோபாயமாகவும், அதேவேளை பாதுகாப்பாகவும் அரசுக்கு எதிரான தங்களது இந்தபோராட்டத்தை இறுதி வெற்றிவரை கொண்டுசெல்ல வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.


சிங்களமக்களிடையே வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களபௌத்த பெருமிதசிந்தனைகளை அவற்றால் இலாபமடைந்துவரும் சக்திகள் தமதுநலன்களையும் இருப்பையும் பாதுகாப்பதற்கு எப்போதும் பயன்படுத்தி வந்துள்ளனர்.இப் போராட்டத்திலும் பிரிவினைவாத சிந்தனைகளாலும் ,தவறான ஏவல்களாலும் மட்டுமல்லாது போலித் தோழமையைத் தெரிவிப்பதனூடாகவும் போராட்டத்தைத் திசைதிருப்பவும் முயற்சிக்கின்றனர்


இந்தசக்திகள் தென்பகுதிமக்களின் தற்போதையபோராட்டங்கள் தங்களது நலன்களைப் பாதிக்கக் கூடிய உண்மையான மாற்றங்களுக்கு வழிசமைக்கக்கூடுமோ, புரட்சிகரமான முழுமையான மாற்றங்களுக்கு வழிவகுத்து விடுமோஎனஅஞ்சுகின்றார்கள்.

பதிலாக தாமும் மக்களுடன் நிற்பவர்கள் என்ற போர்வையில் சிறிய யாப்புமாற்றங்கள் மற்றும் ஒருசில முகமாற்றங்கள் மூலம் தற்போதைய ஜனாதிபதியைத் தற்காலிகமாகவேனும் தக்கவைத்துக் கொண்டு, சிங்களபௌத்த பேரினவாதநலன்களுக்கான தற்போதைய யாப்பை இயன்றவரை பேணும் வகையிலான தீர்வுகளைப் பரிந்துரைத்து போராட்டத்தை தறுக்கணிக்க முயன்று வருகின்றனர்.


இத்தகைய சூழலில் தெற்குமக்கள் தங்களதுபோராட்ட இலக்குகளை இராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவது என்ற குறுகிய இலக்குகளுக்கு அப்பால் வளர்த்தெடுக்கவேண்டும். அந்த இலக்குகளை தெளிவாகவும் வரையறுத்து வெளிப்படுத்தவும்வேண்டும்.

இந்தநாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான சிங்களபௌத்த பேரினவாதசிந்தனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மதச்சார்பற்ற,மக்களுக்குபொறுப்புச் சொல்லும் வகையிலான ஒரு கூட்டாட்சி நாட்டையும்,அதற்கேற்றவாறான மனோநிலைமாற்றத்தையும் உருவாக்குவதற்கு ஏற்றதாக ஒரு புரட்சிகரமான போராட்டமாக தங்களது போராட்டத்தை மாற்றி அமைப்பதனை நோக்கமாகக் கொண்டு முன்னேறவேண்டும்.

இதன் மூலமே இலங்கையின் ஏனைய தேசிய இனங்களும்,சமூகங்களும் மனத் தடைகளோ, அச்சமோ இன்றி சிங்களமக்களின் இன்றையபோராட்டத்தில் கைகோர்க்கும் நிலைமைஉருவாகும். அத்தகையபுரட்சிகரநிலை ஒன்றும் அதன் மூலம் வருகின்ற மாற்றங்களும் மட்டுமே நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கான நிரந்தரதீர்வுகளை நோக்கியபாதையில் நாட்டையும் மக்களையும் முன்கொண்டுசெல்லும்எனதமிழ் சிவில் சமூகஅமைப்புகளாகியநாங்கள் உறுதியாகநம்புகின்றோம்.


• அடையாளம் கொள்கைஆய்வுக்கானநிலையம்
• அகரம்
• ஐராணிஅறக்கட்டளை,மட்டக்களப்பு
• நீதிக்கும் மாற்றத்திற்குமானநிலையம்
• சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் அமைப்பு,அம்பாறை
• கிழக்குபிராந்திய சபை,அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
• கிழக்குசமூகஅபிவிருத்திக்கானஅறக்கட்டளை
• யாழ்ப்பாணபல்கலைக்கழகஊழியர் சங்கம்
• காத்தான்குடிசிவில் கமூகநிறுவனங்களின் சம்மேளனம்
• சர்வமதப் பேரவை,மட்டக்களப்பு
• யுhழ்ப்பாணம் பொருளியலாளர் சங்கம்
• சமாதானஆணைக்குழு,அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
• நீதிக்கும் சமாதானத்துக்குமானகுருக்கள் மற்றும் துறவிகள்,வடக்கு – கிழக்கு
• புழதிசமூக இயக்கம்,திருகோணமலை
• தமிழ் சமூகசெற்பாட்டாளர்கள் இணையம்
• தமிழ் சிவில் சமூகஅமையம்
• தமிழர் மரபுரிமைப் பேரவை
• தளம்,திருகோணமலை
• தென் கயிலைஆதீனம்
• வெண் மயில் அமைப்பு,மட்டக்களப்பு
11.05.2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More