Home இலங்கை கஞ்சாவுடன் இருவர் கைது – வாகனமும் பறிமுதல்

கஞ்சாவுடன் இருவர் கைது – வாகனமும் பறிமுதல்

by admin

 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி    காவல்துறைப்  பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சாவகச்சேரி பகுதியில் , காவல்துறையினருடன் இராணுவ புலனாய்வாளர்களும் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே, வாகனத்தில் இருந்து 07 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து, வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர் , கைது செய்யப்பட்டவர்களையும்  வாகனம் மற்றும் கஞ்சாவையும்  காவல்  நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More