Home இலங்கை கட்டுநாயக்கா விமான நிலைய, போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் தளர்வு..

கட்டுநாயக்கா விமான நிலைய, போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் தளர்வு..

by admin

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து  வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து. வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, நேற்று முன் தினம் இரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இனி வழமை போன்று, பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார். #katunayakeairport # colomboairport #eastersundayattackslk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More