Home இலங்கை ஜயம்பதி விக்ரமரட்னவுக்கு பதில் சமன் ரத்னபிரிய….

ஜயம்பதி விக்ரமரட்னவுக்கு பதில் சமன் ரத்னபிரிய….

by admin

ஜயம்பதி விக்ரமரட்ன பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமன் ரத்னபிரியவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் இன்றைய தினம் (23) எழுத்து மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன நேற்று (22) தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தார்.

அதன்படி, நாடாளுமன்ற பொதுச் செயலாளரால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியான சமன் ரத்னபிரிய அரச தாதியர் சங்கத்தின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More