Home இந்தியா டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவி விலகியுள்ளார்

டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவி விலகியுள்ளார்

by admin

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்  பதவி விலகியுள்ளார். இவருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே  நிலவி வந்த முரண்பாடுகள் காரணமாகவே இவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நஜீப் ஜங்  தனது  பதவிவிலகல்  கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதுடன் தனக்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசு மற்றும் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நஜீப் ஜங் பதவி விலகியதனையடுத்து, புதிய ஆளுநர் நியமனம் குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More