Home இந்தியா தர்மமே வெல்லும் – ஆளுனரை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம்

தர்மமே வெல்லும் – ஆளுனரை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம்

by admin


தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் நல்லதே நடக்கும்; எனவும்  தர்மமே வெல்லும் எனவும் தமிழக  முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை  வந்துள்ள  ஆளுநர் வித்யாசகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு  ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். சுமார் 15 நிமிடம் இச்சந்திப்பு நடைபெற்றது

இச்சந்திப்பின் போது  தமிழக முதலமைச்சர்  தனது ராஜினாமாவை மீளப்பெறுவது மற்றும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுனருடனான சந்திப்பின் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த வேளையிலேயே  ஓ. பன்னீர்செல்வம். இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என்று மட்டும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை  வெளியிட்டுள்ளார் எனவும்  அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More