Home இலங்கை பலாலி இராணுவ முகாமுகாம் பகுதியில்  குண்டு வெடிப்பு – சிப்பாய் பலி…

பலாலி இராணுவ முகாமுகாம் பகுதியில்  குண்டு வெடிப்பு – சிப்பாய் பலி…

by admin

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுகாம் பகுதியில்  குண்டு வெடிப்பு இடம்பெற்ற நிலையில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(1) மாலை குறித்த இராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் இராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன் போது கல் ஒன்றை அகற்றுவதற்காக நான்கு இராணுவ வீரர்கள் இணைந்து அகற்ற முற்பட்டுள்ளனர். அவ்வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.

குறித்த வெடி விபத்தினால் சம்பவ இடத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வெடிச்சம்பவத்தில் பலியான இராணுவ வீரரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ பொலிஸார் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை இணைந்து மேற்கொண்டுள்ளனர். #யாழ்போதனாவைத்தியசாலை #இராணுவமுகாம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More