Home இலங்கை போட்டிகளில் பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாக வரவேற்பு!

போட்டிகளில் பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாக வரவேற்பு!

by admin

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் சிறைச்சாலை திணைக்களத்தை பிரநிதித்துவப்படுத்தி , போட்டியில் பதக்கங்களை வென்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில்  இன்றைய தினம் வியாழக்கிழமை , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களால் பதக்கங்களை பெற்ற உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு , கௌரவிப்பும் இடம்பெற்றது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து பங்கு பற்றிய வீரர்களில் ஈட்டி எறிதல் போட்டியில், எஸ். சியானியஸ் தங்க பதக்கத்தையும்,  உயரம் பாய்தல் போட்டியில், யூட் பீரிஸ் வெள்ளிப்பதக்கத்தையும் , குண்டு எறிதல் போட்டியில் ரி.சி. அன்ரு வெள்ளி பதக்கம் மற்றும் தட்டெறிதலில் வெண்கல பதக்கத்தையும் , 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் எச்.ஜே. அபேயரத்தனா வெண்கல பதக்கத்தையும் , ஜே. றொகான் 4 X 400 மீற்றர் அஞ்சல் ஓட்ட போட்டி மற்றும் 4 X 100 ஆகிய போட்டிகளில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More