Home இலங்கை ரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…

ரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…

by admin

“நானும், எனது தந்தை ராஜபக்சவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம்” என மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-அமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார்.

அப்போது விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் செல்ல   ரஜினி முடிவு செய்ததாகவும், ஆனால் அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

அரசியல் நடவடிக்கைக்காக இலங்கை வரும் அவருக்கு விசா வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

எனினும்  இதனை இலங்கை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. மேலும் அதுபற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நானும், எனது தந்தை ராஜபக்சேவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம். எந்த ஒரு தடையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More