Home சினிமா விமல் – ஓவியா நடிப்பில் தொடங்கியது களவாணி-2 படப்பிடிப்பு:

விமல் – ஓவியா நடிப்பில் தொடங்கியது களவாணி-2 படப்பிடிப்பு:

by admin


இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் – ஓவியா நடிக்கும் களவானி 2  -இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  விமல் ஓவியா நடிப்பில் வெளியான களவாணி முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையிலேயே இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.

விமல் நடித்த ‘மன்னர் வகையாறா’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அவரது நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’ படம் வெளியீட்டுக்கு  தயாரான நிலையில் உள்ளது.  விமல் நடித்த மேலும் சில படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.

தொடர்ந்து இயக்குனர் எழில், இயக்குனர் சுராஜ், இயக்குனர் வசந்தமணி, இயக்குனர் மஜித் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் விமல் படங்களில் நடிக்கவுள்ளார். இவ்வாறு பல படங்களை தம் வசம் வைத்திருந்தாலும் களவாணி 2 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்குணம் இயக்கத்தில் விமல் – ஓவியா நடிக்க `கே-2’ முக்கிய கதாபாத்திரத்தில் சூரி, கஞ்சாகருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடிக்கிறார்கள். வர்மான்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணம் இந்த படத்தை இயக்கி, தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More