Home இலங்கை வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உலகக்கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி

வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உலகக்கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி

by admin


2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வீரர்கள் களத்தில் இறங்கும்போது  அவர்களின் முதுகில் பச்சை , நீல நிறத்தில் விளக்குகள் ஒளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வீரர்களின் உடல்தகுதி, திறனை ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் கண்காணிக்க முடியும் என்பதுடன் வீர்ர்கள் எத்தனை நிமிடங்கள் உடல்பயிற்சி மேற்கொண்டார்கள் களத்தில் எத்தனை நிமிடங்கள் செயலூக்கத்துடன் இருந்தார்கள் எனபவற்றினையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களின் பணிப்பளு தொடர்பிலும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும்இ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 17, 2018 - 8:50 am

Ha ha ha so nice ya. This is a blatant human right violation. In fact those guys were fully monitored in other aspects. Who ever would not escape in those abroad lands by asking any visas. In more those guys would not elope with their Girl friends even or els having any sex even ha ha ha. One way good by protecting those guys would not get any AIDS infection. Such good gesture ya. In more no more betting in future.May God bless you all folks.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More