திட்டமிடப்பட்ட தாக்குதல் நிறுத்தத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போவின் சுற்றுப்புறங்களில் விமானத் தாக்குதல்களை ரஷியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் இருக்கும் அலெப்போ பகுதிகள் சிரியாவின் வான்தாக்குதலால் பேரழிவுக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில் நாளை வியாழக்கிழமை நிர்ணயிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேரத்திற்குள் பொது மக்களும் போராளிகளும் அலெப்போவை விட்டு வெளியேறுவதற்காக ரஷ்யாவும், சிரியாவும் குண்டு தாக்குதல்களை நிறுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அலெப்போவை விட்டு போராளிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் அவ்விடத்தை விட்டு செல்ல போவதில்லை என்றும், தொடர்ந்தும் போரிடுவோம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.