மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தியுள்ளது.
பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போதும் அதன் பின்னரும் இந்த விவகாரம் தொடர்பில் நேரடி தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பாரிய நிதி மோசடிகள் இடம்பெறும் ஓர் மையமாக இலங்கை மத்திய வங்கி மாற்றமடைந்துள்ளதாகவும், மத்திய வங்கியின் ஆளுனராக தமக்கு மிகவும் நெருக்கமான ஒருவரையே பிரதமர் நியமித்திருந்தார் என அவர் குற்றம் ஜேவிபி கூறுகிறது.
திருமண வீடு ஒன்றுக்கு செல்வது தொடர்பிலும் அர்ஜூன், ரணிலிடம் கூறிவிட்டே செல்வதாகத் தெரிவித்துள்ள ஜேவிபி, இருவருக்கும் இடையில் அவ்வாறான ஓர் நெருக்கமான நிலைமை காணப்படுவதாக கூட்டிக்காட்டியுள்ளது.
கோப்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ள ஜேவிபி, மத்திய வங்கி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழே இயங்கி வருகின்றது எனவும், மோசடி குறித்த பொறுப்பிலிருந்து பிரதமர் தப்பிச் செல்ல முடியாது எனவும், அவர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விடயங்களை ஊடகங்களில் வெளிப்படுத்திய ஊடக நிறுவனங்களை நெருக்கடிக்கு உள்ளாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் கூட்டிக்காட்டியுள்ளது.