இந்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கேரளாவில் 13ம்திகதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐஎஸ்ரி. வரி அமுலாக்கத்துக்கு பின்பும், பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் முறை அமுலாக்கத்துக்கு பின்னர் மக்களுக்கு பாரிய அசௌகியாங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் விலைவாசி பயங்கரமா அதிகரித்துள்ளது.
அதற்கு தீர்வு காண மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவரும், கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதாலா, தற்போதைய சூழலில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. ஆகவே, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.