ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் இது தொடர்பில், இறுதிமுடிவு எட்டப்படவில்லை எனவும் இடஒதுக்கீடு தொடர்பில் திருப்தி ஏற்பட்டால் மாத்திரமே தொடர்ந்து இணைந்து செயற்படுவது சாத்தியமாகுமென பங்காளிக்கட்சிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.