வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதன் அடிப்படையில், இந்த மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணமாக அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் யாப்பில் பிரிவினையைத் தடுக்கும் உறுதிப்பாடு கொடுக்கப்பட்டுள்ளமையால் இவ்விரு மாகாணங்களும் இணைவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் இரா. சம்பந்தனை, கொழும்பில் நேற்று (05) நேற்றையதினம் கொழும்பில் சந்தித்து உரையாடி போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சமகால அரசியல் நிலவரம் குறித்து பிரித்தானிய அமைச்சருக்கு தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், புதிய அரசியலமைப்பு உருவாக்கல் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இதயசுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்நாட்டில் பல்வகைத்தன்மையை அங்கிகரிக்கும் முகமாக 1957ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் ஆனால், துரதிஷ்டவசமாக அந்த எந்தவொரு முயற்சியும் யதார்த்த நிலையை அடையவில்லை. என்பதனையும் வலியுறுத்தியு ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments
கிழக்கு மக்கள் யாரும் வடக்குடன் கிழக்கை இணைக்கவோ அல்லது கிழக்குடன் வடக்கை இணைக்கவோ ஒருபோதும் கேட்கவில்லை. அப்படிக் கேட்கவும் மாட்டார்கள். வடக்கு மக்களும் அப்படியே. தழிழரசியல்வாதிகளுக்கும் தெரியும் இணைப்பு ஒருபோதும் நடக்காது என்பது. என்ன செய்வது. அவரகள் பிழைப்பும் நடக்கனுமே! கிழக்கானுக்குத் தெரியும் கிழக்கை வடக்குடன் இணைத்தால் என்ன நடக்கும் என்று.
தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து கடந்த காலத்தில் இருந்தது போல் ஒரு அலகு ஆக்குங்கள் என்று தமிழர்கள் தேர்தல் மூலம் ஆணையிட்டுள்ளார்கள்.