145
இலங்கையின் சிறைச்சாலைள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரிடம் கோருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் இவர்களில் மூவர் தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்ணாவிரதம இருப்பவர்களது நலம் குறித்து விசாரணை செய்ய நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னதாகவும் இதுபோன்று சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love