173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இவ்வாண்டு பெரும் போகத்திற்கான விதை நெல்லினைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலே கடந்த சிறுபோகத்தில் அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம், இரணைமடுக்குளம் என்பவற்றின் கீழ் விதை நெல்லினை இலக்காகக் கொண்ட சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. சிறுபோக செய்கையின் இறுதி நேரத்தில் குளங்களில் நீர் மட்டம் குறைவடைந்ததன் காரணமாக நெற்செய்கையில் பாதிப்புகள் ஏற்பட்டன. அவை அறுவடையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தின.
இதன் காரணமாக கூடுலான விவசாயிகள் தமது நெல்லினை விதை நெல்லிற்குப் பயன்படுத்த முடியாத நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நெற்செய்கை முழுமையாக வெற்றியளிக்கவில்லை.
இதன் காரணமாக விதை நெல்லிற்கான நெருக்கடியினை விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் நாளை 10.10.2017 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விவசாயக் குழுக் கூட்டத்தில் விதை நெல்லினைப் பெற்றுத் தருமாறு மாவட்டச் செயலாளரிடம் விவசாய அமைப்புகள் வலியுறுத்தவுள்ளன. நாளை நடைபெறவுள்ள விவசாயக் குழுக் கூட்டம் இவ்வாண்டு பெரும்போக நெற்செய்கையினை இலக்காகக் கொண்டதாக நடைபெறவுள்ளது.
Spread the love