அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து உள்ளது என்று ஆளும் குடியரசு கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் பொப் கார்கர் தெரிவித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.
டொனால்டு ட்ரம்ப் பயிற்சி அதிபர் போல செயற்படுகின்றார் எனவும் ரியாலிட்டி ஷோவில் பேசுவது போல ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார் எனவும் வடகொரியா குறித்த அவரது சர்ச்சை கருத்துகளால் 3-ம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன் எனவும் அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு எனவும் ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு வருகின்றமை தொடர்பிலேயே அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.