litro gas நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு, அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தாய்வான் வங்கி ஒன்றில் இடம்பெற்ற நிதி மோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள அவருக்கு, litro gas நிறுவனத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அந்த அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
litro gas நிறுவனம் அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த வெற்றிடத்திற்கு பதில் தலைவர் ஒருவரை நியமிக்குமாறும் ரவீந்திர ஹேவாவிதாரண அறிவுறுத்தியுள்ளார்.