இந்திய கிராமங்களின் முன்னேற்றத்துக்கு சாதிப் பாகுபாடே தடையாக இருக்கிறது எனவும், இதுவே விஷமாக பரவி கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனை களைந்து ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியை மேம்பாடு அடைய செய்வது தற்போது மிகவும் அவசியமாகும் எனத் தெரிவித்த அவர், கிராம முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடையும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சமூகநல தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 115–வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சாதி முரண்பாடு குறித்த விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.