159
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இரண்ட மணியளவில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையமே ஜனாதிபதியால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான பீ. ஹரிசன், விஜயகலா மகேஸ்வரன், றிசாட் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினா்களான அங்கஜன் இராமநாதன், மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Spread the love