139
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரில் தீபாவளி தினத்தன்று மூன்று மணி நேரம் மாத்திரமே பட்டாசு வெடிக்கலாம் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அப் பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது சூழல் மாசடைதல் அதிகரித்ததன் காரணமாக
தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதேவேளை சண்டிகர் மாநில உயர் நீதிமன்றம், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதேவேளை சண்டிகர் மாநில உயர் நீதிமன்றம், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தீபாவளி அன்று மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை மாத்திரமே குறித்த பகுதிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட நேரங்கள் தவிர்த்து ஏனைய நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கக்கூடாது என்றும், தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமான பட்டாசு கடைகளை அமைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love