பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி உள்ளனர். தீபாவளி பண்டிகை எதிர்வரும் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்க்பபட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் மருத்துவமனை அருகிலோ, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ பட்டாசு வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. அத்துடன் குடிசைப் பகுதி உள்ள இடங்களில் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ரொக்கெட் வெடி வெடிக்ககூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு:-
182
Spread the love