204
உக்ரைனில் கார்கிவ் நகரில் வீதியில் நடந்து சென்ற மக்களிடையே காரை செலுத்தி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கார் சாரதியினை கைது செய்து விசாரணை மேற்டகொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் பல ஐரோப்பிய நகரங்களில் வாகனங்களால் மக்கள் மீது மோதி தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Spread the love