218
யாழ்ப்பாணத்தில் தீபாவளி தினத்தில் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇ தீபாவளி தினமான நேற்றையதினம் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு, கத்திக்குத்து போன்றவற்றினால் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் மந்திகை வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நிலையில், அண்மையில் இரு சீ.சீ.ரி.வி. காணொளிகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love