இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டம் இலங்கையிடம் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். துணை நிறுவனங்களின் விற்பனை மூலமாகவும், தனியார்மயமாக்கல் மூலமாகவும் கிடைக்கும் பணம், கடன்களை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனை ஒரு அச்சுறுத்தலாக தாம் பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர் இதுவரை தாங்கள், கடன் மீளச்செலுத்தலுக்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டுக் கடன், 2016ஆம் ஆண்டின் முடிவில், 47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதாவது இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 57 சதவீதமாக காணப்பட்டது எனவும் அக்கடன்களில் 68 சதவீதமானவை அரசதுறையின் கடன்களாக உள்ளன எனவும் இந்திரஜித் குமாரசுவாமி; குறிப்பிட்டுள்ளார்.