விண்கல் ஒன்றின் பாகம் என கருதப்படும் மர்ம பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புவியின் வளிமண்டலத்தில் எதிர்பாராத விதமாக நுழைந்த விண்கல்லின் பகுதியே அங்கு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எரிகல்லை பொது மக்கள் தொட முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி அறிந்தால் தகவல் தெரிவிக்குமாறும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப் பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர் எனவும் விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் வீழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் எனவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.