தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இன்றையதினம் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பானது இன்று முற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தி தருமாறு வட.மாகாண ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் வலியுறுத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக அனைத்துபீட மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்னமேனன் தெரிவித்துள்ளார்.