182
புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட மக்கள் இன்று (23) தங்களது தோட்டத்திற்கான பாதையை திருத்தி தருமாறு கோரி ஈடுபட்ட ஆர்ப்பாட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.
இறுதித் தீர்மானமாக ஆரப்பாட்ட ஒருங்கணைப்பாளர்களுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று புஸ்ஸல்லாவ காவல்நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானம் கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் கடையடைப்பும் பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் ஆரம்பமாகியுள்ளது.
Oct 23, 2017 @ 04:40
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் கடையடைப்பும் பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் இடம்பெறுகிறது. நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டத்திற்து செல்லும் 25 கி.மீ பாதை 30 வருடங்களாக சீர்;திருத்தம் செய்யாமை குறித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்ப்படுகின்றது.
Spread the love