இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மீண்டும் நடைபெறுகின்றது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், டிடிவி தினகரன் அணியும் உரிமை கோரி வருகின்றன.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 16 ஆம் திகதி நடந்த விசாரணையின்போது, பழனிசாமி தரப்பினர் அளித்த பிரமாணப் பத்திரங்களில் போலி கையொப்பம் இருப்பதாகவும் இதுதொடர்பான சாட்சியங்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தினகரன் தரப்பு விடுத்த கோரிக்கையினை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
அதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரியதற்கு பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்க்பபட்ட நிலையில் இன்றைய தினம் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. இந்த விசாரணையின்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தரப்பு வாதங்களையும் தேர்தல் ஆணையம் கேட்க இருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.