திவுலபிடிய பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரோத்ரிகோவின் வீட்டில் இருந்து, ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத கவச சட்டை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக காவல்துறைத்தரப்புகள் தெரிவித்துள்ளன, நேற்று பகல் திவுலப்பிட்டி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குழுவொன்றுக்கும் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில் இது தொடர்பில் ரன்டீர் ரோத்ரிகோ உள்ளிட்ட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.