புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகாநாயக்கர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மகாநாயக்கர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நேற்றைய கலந்துரையாடலின் போது முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மகாநாயக்கர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருவதாகவும் இது குறித்த உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளவதற்காகவே மகாநாயக்கர்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.