196
எகிப்தின் மேற்கு பாலைவன பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்தில் மத அடிப்படையிலான தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்ற நிலையில் கடந்த வாரம், கெய்ரோ நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினருமாக 53 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட ராணுவம் பாலைவனப் பகுதியில் மறைந்திந்த 12 தீவிரவாதிகளை கெனான்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love