காஷ்மீர் மக்களின் இதயங்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் சுயாட்சியை திரும்ப தாருங்கள் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பரூக் அப்துல்லா 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இடம்பெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம் எனத் தெரிவித்த அவர் தாங்கள் இந்தியாவை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஆனால இந்தியா அதை புரிந்துகொள்ளாமல், தாங்கள் பெற்றிருப்பதை எல்லாம் பறிக்கின்றது எனத் தெரிவித்த அவர் மக்களின் இதயங்களை வெற்றிகொள்ள முயற்சிக்கும் வரை ஜம்மு, காஷ்மீர், லடாக் உங்களை தழுவாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் எங்கள் இதயங்களை வெற்றிகொள்ள வேண்டுமானால், எங்கள் சுயாட்சியை எங்களிடம் திருப்பித்தாருங்கள் எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.