தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) பதில் பணிப்பாளர்நாயகமாக ஒய்.சி.மோடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தீவிரவாத தடுப்பு தொடர்பான வழக்குகளைக் கையாளும் நாட்டின் மிகப் பெரிய அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர்நாயகமாக சரத்குமார் பதவி வகித்தார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து, அசாம் – மேகாலயா ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த யோகேஷ் சந்தர் மோடி புதிய பணிப்பாளர்நாயகமாக நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து என்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சரத்குமார் காலத்தில் யுஎன்எல்எப் வழக்கு, ஐதராபாத் தில்சுக்நகர் குண்டுவெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கு, போலி இந்திய ரூபாய் நோட்டுகள் வழக்கு ஆகிய முக்கியமான பல வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.