தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை எதிர்வரும் 4ம் திகதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குழுவுக்கு 45 பேர் இருப்பார்கள் எனவும் தேவைக்கேற்ப மீட்புக்குழுவின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களில் இந்த வீரர்கள் தங்க வைக்கப்படுள்ளதாகவும், படகு உள்ளிட்ட மீட்புப்பணிக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழக கடலோர மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பாடசாரலகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தததனையடுத்தே இவ்வாறு விடுமுஐற வழங்கப்பட்டுள்ளது