167
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாண பல்கலைக்கழக முதன்மை வளாகத்துக்குள் தற்போது தோன்றியுள்ள அசாதார நிலமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை துணைவேந்தருடன் அனைத்துப் பீடாதிபதிகளும் கூடி ஆராய்ந்தனர்.
அதன்படி கலைப்பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்துக்குள் உள்புகுவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றது.
விடுதியில் தங்கியுள்ள குறித்த 3 பீடங்களின் மாணவர்களும் நாளை புதன்கிழமை மாலை 4 மணிக்கு முன்பாக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் -என்றுள்ளது.
Spread the love