149
இத்தாலியின் மெடிடேரியன் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்களை ஐரோப்பிய கடற்படையினர் மீட்டுள்ளனர். நேற்றையதினம் இத்தாலி கடல் பகுதியில் லிபியாவில் இருந்து சில படகுகளில் அதிகளவானோர் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது மத்திய தரைக்கடலில் படகுகளின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக படகுகள் கடலில் மூழ்கின.
அப்போது அங்கு ரோந்து வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 700 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் மெடிட்டேரியன் கடலில் இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love