கடந்த ஒருவாரமாக தாழ் அமுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சினால் யாழ் மாவட்டத்தில் 622 குடுப்பங்களைச் சேர்ந்த 2107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் தாழ் நிலப்பரப்பில் வாழும் குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் உடுவில், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, சண்டிலிப்பாய், ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களே இவ்வாறு பாதிக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 17 குடுப்பங்களைச் சேர்ந்த 67 பேர் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இடைத்தாங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான சமைத்த உணவினை யாழ் மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்;.